கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-12

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி. 2049 கடகம்-(ஆடி) ௨௦, ஞாயிறு (05-08-2018) காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம். ஏ.,பி.எல்., (வழக்கறிஞர் கோவை)
வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப.வேலவன், செயலர், தொல்காப்பியர் பேரவை.
ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.
தலைமையுரை: கவிஞர் ஒண்டிபுதூர் தேவமணி (மின்பொறியாளர் பணிநிறைவு)
சிறப்புரை: புலவர் பொன்முடி சி. சுப்பையன் எம்.ஏ., எம்.எட்., (தமிழாசிரியர் பணிநிறைவு), தலைவர், தமிழ்நாடு இலக்கியப்பேரவை, கோவை.
தலைப்பு: "தொல்காப்பியம் காட்டும் மரபியல் கூறுகள்"
முன்னிலை: மருத்துவர் கோவி ஐயா (சித்தமருத்துவர் அன்னூர், 95 அகவை)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: "அகத்திணையியல் கைக்கிளை விளக்கம்"

இறுதியில் பொருளாளர் கவிச்சுடர் கா. உமாபதி அவர்கள் நன்றி உரை கூற விழா இனிதே முடிந்தது. விழாவில் பேராசிரியர் முனைவர் அரவிந்த், காட்டூர் சம்பத்து, நித்தாயனந்தபாரதி, பொ.இராமலிங்கம், புலவர் சாமியப்பன், சந்திர சேகரன், திருஞானசம்பந்தம் போன்ற சான்றோர்களும் கலந்து கொண்டனர். மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் அருணா போன்ற கல்லூரி மாணாக்கர்களும் விஜயபிரபா, இரத்தினசாமி போன்ற கவிஞர்களும் விழாவில் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.