கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

போற்றி போற்றி தொல்காப்பிய இலக்கணம் போற்றி

போற்றி போற்றி தொல்காப்பிய இலக்கணம் போற்றி

ஆக்கம்: புலவர் ஆ.காளியப்பன்
நாள்: 14-06-2019
*-*-*

எழுத்து:

	உலகின் முதல் இலக்கணம் தொல்காப்பியமே போற்றி
	தொல்காப்பியம் உரைத்த தொல்காப்பியரே போற்றி
	ஐவகை இலக்கணம் தந்தாய் போற்றி
	எழுத்து இலக்கணம் தந்தாய் போற்றி
	சொல் இலக்கணம் தந்தாய் போற்றி
	பொருள் இலக்கணம் தந்தாய் போற்றி 
	யாப்பு இலக்கணம் தந்தாய் போற்றி
	அணி இலக்கணம் தந்தாய் போற்றி
	எழுத்தை எடுத்துச் சொன்னாய் போற்றி
	உயிர் எழுத்து  12 தந்தாய் போற்றி
	மெய் எழுத்து 18 தந்தாய் போற்றி
	குறில் எழுத்து 5 தந்தாய் போற்றி
	நெடில் எழுத்து 7 தந்தாய் போற்றி
	வல்லினம்  6 தந்தாய் போற்றி
	மெல்லினம் 6 தந்தாய் போற்றி
	இடையினம் 6 தந்தாய் போற்றி
	சார்பெழுத்து பத்தும் தந்தாய் போற்றி
	உயிர்மெய் 216 தந்தாய் போற்றி
	ஆய்த எழுத்து 1 தந்தாய் போற்றி
	உயிரளபெடை தந்தாய் போற்றி
	ஒற்றளபெடை தந்தாய் போற்றி
	குற்றியலிகரம் தந்தாய் போற்றி
	குற்றியலுகரம் தந்தாய் போற்றி
	ஐகாரக்குறுக்கம் தந்தாய் போற்றி
	ஔகாரக்குறுக்கம் தந்தாய் போற்றி
	ஆய்தக் குறுக்கம் தந்தாய் போற்றி
	மகரக்குறுக்கம் தந்தாய் போற்றி
	எழுத்தை அளக்க மாத்திரை தந்தாய் போற்றி
	கண்ணிமைக்கும் நேரமே மாத்திரை என்றாய் போற்றி
	கைநொடிக்கும் நேரமும் மாத்திரை என்றாய் போற்றி
	குறிலை ஒரு மாத்திரை என்றாய் போற்றி
	நெடிலை இரு மாத்திரை என்றாய் போற்றி
	மெய்யிற்கு மாத்திரை அரை என்றாய் போற்றி
	புள்ளி வைத்தால் மெய் என்றாய் போற்றி
	தமிழுக்கு எனப்பல சிறப்புத் தந்தாய் போற்றி
	ஓர் எழுத்து ஒருசொல் தந்தாய் போற்றி
	ழ   என்று எழுத்தை தந்தாய் போற்றி
	ற  என்று எழுத்தை தந்தாய் போற்றி
	ன என்று எழுத்தை தந்தாய் போற்றி
	எ ஒ வும்  தமிழக்கே என்றாய் போற்றி
	சொல்லையும் பிரித்துச் சொன்னாய் போற்றி
	சொல்லையும் சேர்க்க வழிசொன்னாய் போற்றி
	வேற்றுமை எட்டாய்ப் பிரித்தாய் போற்றி
	எழுவாய் வேற்றுமை என்றாய் போற்றி
	விளி வேற்றுமை என்றாய் போற்றி
	வேற்றுமை அல்லன அல்வழி என்றாய் போற்றி
	வினைத்தொகை  தந்தாய் போற்றி
	பண்புத்தொகை தந்தாய் போற்றி
	உவமைத்தொகை தந்தாய் போற்றி
	உம்மைத் தொகை தந்தாய் போற்றி
	அன்மொழித்தொகை  தந்தாய் போற்றி
	வினைச்சொல் மூன்று என்றாய் போற்றி
	வினைமுற்று தந்தாய் போற்றி
	பெயரெச்சம் தந்தாய் போற்றி
	வினையெச்சம் தந்தாய் போற்றி
	இடைச்சொல் தந்தாய் போற்றி                                                      
	உரிச்சொல் தந்தாய் போற்றி
	அடுக்குத் தொடரும் தந்தாய் போற்றி
	இரட்டைக் கிளவியும் தந்தாய் போற்றி
	சேர்ப்பை இரண்டாய்த்  தந்தாய் போற்றி
	இயல்பு ஒன்று என்றாய் போற்றி
	விகாரம் மூன்று என்றாய் போற்றி
	தோன்றல் விகாரம் தந்தாய் போற்றி
	திரிதல் விகாரம்  தந்தாய் போற்றி
	கெடுதல் விகாரம் தந்தாய் போற்றி
	இதுவே எழுத்தெனச் சொன்னாய் போற்றி

சொல்:

	சொல்லின் இலக்கணம் சொன்னாய் போற்றி
	சொல்லை நான்காய்ச் சொன்னாய் போற்றி
	பெயர்ச்சொல் தந்தாய் போற்றி
	வினைச்சொல் தந்தாய் போற்றி
	இடைச்சொல் தந்தாய் போற்றி
	உரிச்சொல் தந்தாய் போற்றி
	மொழியை மூன்றாய் மொழிந்தாய் போற்றி
	தனிமொழி என்று தந்தாய் போற்றி
	தொடர்மொழி என்று தந்தாய் போற்றி
	பொதுமொழி என்று தந்தாய் போற்றி
	திணையை இரண்டாய்த் தந்தாய் போற்றி
	உயர்திணை என்று உரைத்தாய் போற்றி
	அஃறிணை என்று அறைந்தாய் போற்றி
	பாலை ஐந்தாய்ப் பகர்ந்தாய் போற்றி
	ஆண்பால் என்று   தந்தாய் போற்றி
	பெண்பால் என்று தந்தாய் போற்றி
	பலர்பால் என்று தந்தாய் போற்றி
	மூன்றையும் உயர்திணை என்றாய் போற்றி
	ஒன்றன்பால் என்று தந்தாய் போற்றி
	பலவின்பால் என்று உரைத்தாய் போற்றி
	இரண்டையும் அஃறிணை என்றாய் போற்றி
	இடத்தை மூன்றென இயம்பினாய் போற்றி
	தன்மை இடம்என்று தந்தாய் போற்றி
	முன்னிலை இடம்என்று  தந்தாய் போற்றி
	படர்க்கை இடம்என்று  தந்தாய் போற்றி
	எண்ணை இரண்டாய் இயம்பினாய் போற்றி
	ஒருமை என்று   தந்தாய் போற்றி
	பன்மை என்று தந்தாய் போற்றி
	வழக்கை இரண்டாய் வகுத்தாய் போற்றி
	இயல்பு வழக்கு என்று தந்தாய் போற்றி
	தகுதி வழக்கு என்று தந்தாய் போற்றி
	இலக்கியச்சொல் நான்கு என்றாய் போற்றி
	இயற்சொல் என்று தந்தாய் போற்றி
	திரிசொல் என்று தந்தாய் போற்றி
	வடசொல் என்று தந்தாய் போற்றி
	திசைச்சொல் என்று தந்தாய் போற்றி
	பெயர்ச்சொல் ஆறெனச் சொன்னாய் போற்றி
	பொருட்பெயர் என்று தந்தாய் போற்றி
	இடப்பெயர் என்று தந்தாய் போற்றி
	காலப்பெயர் என்று தந்தாய் போற்றி
	சினைப்பெயர் என்று தந்தாய் போற்றி
	பண்புப்பெயர் என்று தந்தாய் போற்றி
	தொழிற்பெயர் என்று தந்தாய் போற்றி
	இடுகுறி காரணம் என்றாய் போற்றி
	ஆகுபெயர் அனைத்தும் ஆனாய் போற்றி
	வழா நிலையை தந்தாய் போற்றி
	வழுவமைதியைத் தந்தாய் போற்றி
	பொருள்கோள் எட்டும் சொன்னாய் போற்றி
	சொல்லின் இலக்கணம் இதுவே என்றாய் போற்றி

பொருள்:

	பொருள் இலக்கணத்தை உரைத்தாய் போற்றி
	அகம்புறம் என்று தந்தாய் போற்றி
	அகத்தை ஏழாய்ப் பகுத்தாய் போற்றி
	அன்பின் அகத்திணை ஐந்து என்றாய் போற்றி
	நிலமும் பொழுதும் முதல் என்றாய் போற்றி
	நிலத்தை நான்காய்ப் பிரித்தாய் போற்றி
	குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்றாய் போற்றி
	குறிஞ்சி முல்லை திரிந்தது பாலை என்றாய் போற்றி
	பெருந்திணை கைக்கிளை என்றாய் போற்றி
	பொழுதை இரண்டாய் பகுத்தாய் போற்றி
	கருப்பொருள் தந்தாய் போற்றி
	பெரும் பொழுதாறும் தந்தாய் போற்றி
	சிறு பொழுதாறும் தந்தாய் போற்றி
	உரிப்பொருள் ஐந்தும் தந்தாய் போற்றி
	பொருள்தேடக் காரணம் சொன்னாய் போற்றி
	மரபுநிலை மாறக்கூடாது என்னறாய் போற்றி
	இன்பநூலின் முறைகள் இயம்பினாய் போற்றி
	புறத்திணை ஏழும் சொன்னாய் போற்றி
	வெட்சித்திணை தந்தாய் போற்றி
	வஞ்சித்திணை தந்தாய் போற்றி
	உழிஞைத் திணை தந்தாய் போற்றி
	தும்பைத்திணை தந்தாய் போற்றி
	வாகைத்திணைதந்தாய் போற்றி
	காஞ்சித்திணைதந்தாய் போற்றி
	பாடாண் திணைதந்தாய் போற்றி
	களவும் கற்பும் சொன்னாய் போற்றி
	உடன்போக்கும் உண்டு என்றாய்போற்றி
	வரைதல் வகைகளை வைத்தாய் போற்றி
	கரணம்வந்த காரணம் சொன்னாய் போற்றி
	தவத்தின் தன்மையைத் தந்தாய் போற்றி
	பெண்ணின் குணம் மூன்று சொன்னாய் போற்றி
	பத்துப்பொருத்தம் பகன்றாய் போற்றி
	குடும்பத்திற்காகா கொள்கையும் சொன்னாய் போற்றி
	மெய்பாடு எட்டும்  விளம்பினாய் போற்றி
	உவமைகூறும் இடம் சொன்னாய் போற்றி
	முப்பாத்தாறு உவமை சொன்னாய் போற்றி
	செய்யுளை  இதுவென செப்பினாய் போற்றி
	பாவின் உறுப்புகள் ஆறும் சொன்னாய் போற்றி
	செய்யுளில் எழுத்துகள் மூன்று என்றாய் போற்றி
	அசைகள் இரண்டென அறைந்தாய் போற்றி
	சீர்கள் நான்கெனச் செப்பினாய் போற்றி
	தளைகள் ஏழெனச் சொன்னாய் போற்றி
	அடிகள் ஐந்தெனச் சொன்னாய் போற்றி
	தொடையின் வகையும் சொன்னாய் போற்றி
	யாப்பின் ஏழுபகுதிகள் சொன்னாய் போற்றி
	பாக்கள் நான்கும் சொன்னாய் போற்றி
	வெண்பா தந்தாய் போற்றி
	ஆசிரியப்பா தந்தாய் போற்றி
	கலிப்பா தந்தாய் போற்றி
	வஞ்சிப்பா தந்தாய் போற்றி
	பாக்கள் இனத்தையும் சொன்னாய் போற்றி
	ஓசைகள் நான்கெனச் சொன்னாய் போற்றி
	நூலின் இயல்பைச் சொன்னாய் போற்றி
	இருபது வண்ணங்கள் என்றாய் போற்றி
	வனப்பும் எட்டு என்றாய் போற்றி
	மரபை மறவாதே என்றாய் போற்றி
	புல்லும் மரமும் உயிர் என்றாய் போற்றி
	அறிவை ஆறாய்ச் சொன்னாய் போற்றி
	ஐம்பெரும் பொருளும் கலந்தது உலகம் என்றாய் போற்றி
	சூத்திரம் எதுவெனச்சொன்னாய் போற்றி
	உரைகள் இரண்டென உரைத்தாய் போற்றி
	உத்திகள் 32 என்றாய் போற்றி
	நுனித்தகு புலவா போற்றி போற்றி

 
	புலவர் ஆ.காளியப்பன்
	தலைவர் தொல்காப்பியர் பேரவை
	முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்),
	கோயமுத்தூர் 641101 
	அலைபேசி 9788552993 / 8610684232
	மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com 
	pulavarkaliappan.blogspot.in
	http://www.tholkappiyam.org