உலகத் தொல்காப்பிய மன்றம்
அமெரிக்கா-நியூசெர்சி

கிளை தொடக்கவிழா

வணக்கம்!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, சப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை அமெரிக்கா நாட்டில், நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பிசுகாட்டவேயில் (Piscataway) 16.06.2018 சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணிக்கு, கயிலைப் புனிதர் மருதாசல அடிகளார் (பேரூராதினம், தமிழ்நாடு) அவர்களின் அருள் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.

மருதாசல அடிகளாரின் வாழ்த்து மடல்

மேலும் பார்க்க

  • திருமதி பார்வதி விசுவநாதன், திருமதி வசந்தி சுப்பிரமணியன் ஆகியோரின் கடவுள் வாழ்த்துப்பாட்டுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.
  • இம்மன்ற தொடக்க விழாவிற்கு முனைவர் நா. க. நிதி வரவேற்புரையாற்றினார்.
  • நியூசெர்சி இலங்கைத் தமிழ் மன்றத்தலைவர் முனைவர் செல்லையா ஞானசேகரன் தலைமையுரையாற்றினார்.
  • இம்மன்றத் தொடக்க விழாவிற்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
  • வட அமெரிக்க வளர்தமிழ் இயக்கத்தின் திரு. க. சிவகுமார், வட அமெரிக்க நியூசெர்சி தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு. செந்தில்நாதன் முத்துசாமி, நியூசெர்சி அமரர் திரு. குமாரசாமி தமிழ்ப்பள்ளி முதல்வர் முனைவர் கபிலன், திரு. வி. சுப்பிரமணியன் ஆகியோர் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
  • இந்நிகழ்ச்சியில் நியூசெர்சி தமிழ்ச்சங்க ஆர்வலர்கள் திரு. பாலா கோதண்டராமன், திருமதி கவிதா சுந்தர், திரு. மீனாட்சி சுந்தரம், குருவாயூரப்பன் தமிழ்ப்பள்ளி முதல்வர் திரு. மோகன்தாசு சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.